பேலஸ் ஆன் வீல்ஸ்... ரயிலுக்குள் பெரிய ரெஸ்டாரண்ட்... வைரல் வீடியோ!
பின்லாந்து நாட்டின் ரயில்களில் உள்ள நவீன வசதிகள் மற்றும் சுத்தம் குறித்து இந்தியப் பெண் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ரயிலின் உள்ளக அமைப்புகள், இருக்கைகள், கை கழுவும் இடங்கள் மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் மிகச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை அவர் காட்டுகிறார்.
फिनलैंड की रेलवे में सफर कर सुविधाएं और कंफर्ट देखने के बाद भारतीय लड़की हैरान रह गई।
— Dr. Sheetal yadav (@Sheetal2242) December 30, 2025
भारत की GDP फिनलैंड की GDP से 13 गुना बड़ी है — भारत दुनिया की चौथी सबसे बड़ी अर्थव्यवस्था तो वही फिनलैंड 48वीं सबसे बड़ी अर्थव्यवस्था है।
इसके बावजूद फिनलैंड की रेल व्यवस्था हमसे बेहतर कैसे… pic.twitter.com/kScdW3f87T
சொகுசு உணவகம் போலவே ரயில் இருப்பதாகக் கூறிய அந்தப் பெண், இந்தியாவின் பொருளாதாரம் பின்லாந்தை விட பெரியதாக இருந்தும் அங்குள்ள ரயில்வே வசதிகள் இவ்வளவு மேம்பட்டதாக இருப்பது எப்படி என்ற கேள்வியையும் எழுப்புகிறார். இந்த கருத்து பலரின் கவனத்தை ஈர்த்து, வீடியோ பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
சுமார் 78 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோக்கு பயனர்கள் பல கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் பின்லாந்தில் மக்கள் தொகை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என கூறுகின்றனர். மற்றவர்கள் இந்தியாவிலும் ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’, ‘மகாராஜா எக்ஸ்பிரஸ்’ போன்ற சொகுசு ரயில்களில் சர்வதேச தர வசதிகள் ஏற்கனவே உள்ளதாக நினைவூட்டுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
