விமானம் மீது லேசர் லைட்... சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு!

 
எமிரேட்ஸ்


 இந்தியாவில் 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். இங்கு தினமும் லட்சக்கணக்கான   பயணிகள் வந்து செல்கின்றனர். இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தை சுற்றி 5 கிலோ மீட்ட தூர்த்திற்கு ட்ரோன்களை பறக்க விடக்கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. 

எமிரேட்ஸ்

இந்நிலையில், சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது பச்சைநிற லேசர் லைட் அடிக்கப்பட்டது. 

லேசர்

இதனால் அந்த விமானி தொடக்கத்தில் சற்று பதறிய நிலையில், பின்னர் சாதூர்யமாக விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இது குறித்து  விமான நிலைய கட்டுப்பாட்டு அறை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது