விமானத்தை குறிவைக்கும் லேசர் ஒளி… பயணிகள் உயிருக்கு பேராபத்து!

 
லேசர்

இரவு நேரங்களில் தரையிறங்கும் விமானங்களை குறிவைத்து லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. விமான நிலையங்களை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட்டுத்தனமாக லேசர் லைட்டை பயன்படுத்துவது விமான பாதுகாப்புக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. லேசர் ஒளி நேரடியாக விழும்போது விமானிக்கு தற்காலிக பார்வை இழப்பு ஏற்பட்டு, தரையிறக்கம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 2022-ம் ஆண்டில் 3 சம்பவங்களாக இருந்தது, 2023-ம் ஆண்டு 16 ஆக உயர்ந்தது. 2024-ம் ஆண்டில் இது 548 சம்பவங்களாக பாய்ந்தது. நடப்பாண்டு நவம்பர் மாதம் வரை மட்டும் 534 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் அதிகபட்சமாக 105 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 67, இந்த ஆண்டு 54 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

தமிழகத்தின் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் லேசர் ஒளி அச்சுறுத்தல் தொடர்கிறது. விமானம் ஓடுபாதையை தவறி தரையிறங்கும் அபாயம் ஏற்படுவதால், நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேரிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், விமானங்களை குறிவைத்து லேசர் ஒளி அடிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!