'போலீஸ்', 'வக்கீல்', 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மீது நடவடிக்கை... சென்னையில் பரபரப்பு!

 
press
 


சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, காரப்பாக்கம் பகுதியில் பள்ளிக்கரணை போக்குவரத்து உதவியாளர் தலைமையில் போலீசார் நேற்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களில் 'போலீஸ்', 'வக்கீல்', 'பிரஸ்' போன்ற துறைகளைக் குறிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்ததைக் கண்டு போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

ஸ்டிக்கர்

விசாரணையில், சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியாத பல நபர்கள் தங்கள் வாகனங்களில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர், தங்கள் உறவினர்கள் அந்தத் துறைகளில் பணிபுரிவதால் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாகக் கூறினர். இருப்பினும், இதை ஏற்க மறுத்த போலீசார், அந்த வாகனங்களில் இருந்த ஸ்டிக்கர்களை அதிரடியாக அகற்றினர்.

டாக்டர் ஸ்டிக்கர்

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர், காவல்துறையின் சோதனைகளில் இருந்து தப்பிக்க இதுபோன்ற ஸ்டிக்கர்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், எனவே சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் மட்டுமே தங்கள் வாகனங்களில் இத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர். அறிவுரை வழங்கிய பின்னர், வாகன ஓட்டிகளை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுபோன்று போலி ஸ்டிக்கர்களை ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!