1000 ஊழியர்களுக்கு கல்தா .... பேடிஎம் திடீர் முடிவால் அதிர்ச்சி... !

 
பேடிஎம்

பேடிஎம் நிறுவனம் செலவினங்களை குறைக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்  இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  விற்பனை, பொறியியல் உட்பட  பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து  வந்த சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.  பேடிஎம் நிறுவனம் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த அதிரடி நடவடிக்கையை  பேடிஎம் மேற்கொண்டுள்ளது.

பேடிஎம்


செலவினங்களை குறைக்கவும்  நிர்வாகப் பணிகளை மேலும் எளிமையாக்கவும்   செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்தியுள்ளது.  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால்   ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த செலவினங்களில் 10 முதல் 15 சதவீதம் வரை சேமிக்கலாம் என  பேடிஎம் எதிர்பார்க்கிறது.  இந்த ஆட்குறைப்பு குறித்து  பேடிஎம்  “ பேடிஎம்  நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் மார்க்கெட்டிங் குழுவில் உள்ள பணியாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.  

பேடிஎம்

அக்டோபர் மாத தொடக்கம் முதலே இந்த  பணிநீக்க செயல்முறைகளை  படிப்படியாக பேடிஎம் செய்துவருகிறோம்” என  தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பேடிஎம்மின் திடீர் ஆட்குறைப்பைத் தொடர்ந்து பேடிஎம் பங்குகள் இன்று மளமளவென சரியத் தொடங்கின.  இதனால் இன்று காலை வர்த்தகத்தின்போது பேடிஎம் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம்  வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.  
 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web