Block, Inc. நிறுவனத்தில் 4,000 பேர் பணிநீக்கம்... கதறும் ஊழியர்கள்!
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட Block, Inc. நிறுவனம், தனது மொத்த பணியாளர்களில் 40 சதவீதரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. பிரபல தொழிலதிபர் ஜாக் டோர்சி தலைமையிலான இந்த நிறுவனம், முன்பு Square, Inc. என அறியப்பட்டது. Cash App மற்றும் Afterpay போன்ற சேவைகள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறையில் முன்னணியில் உள்ளது.
செலவுகளை குறைத்து செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி நிறுவன பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,000க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பணியை இழந்துள்ளனர்.
இந்த அறிவிப்புக்கு பின் பங்குச்சந்தையில் நிறுவன பங்குகள் 24 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 20 வார சம்பளம், 5,000 டாலர் இடைக்கால நிதி மற்றும் ஆறு மாத மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
