உங்களின் பெருமையைதான் நான் லண்டனில் சேர்க்கப் போறேன் ... சிம்பொனி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

இசைஞானி இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி மார்ச் 8 ம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ திரையரங்கில் அரங்கேற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று மார்ச் 6 ம் தேதி வியாழக்கிழமை இசைஞானி இளையராஜா லண்டன் புறப்பட்டு செல்கிறார். இதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.
சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல. நாட்டின் பெருமை... இந்தியாவின் பெருமை. இன்க்ரீடிப்பில் இந்தியா போல, இன்க்ரீடிப்பில் இளையராஜா என்றார். மேலும், நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் நான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.
இசை நிகழ்ச்சியின் மகிழ்ச்சி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, சிம்பொனி இசை நிகழ்ச்சி உங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்போது எனக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும் என பதில் அளித்துள்ளார். இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்லை. வந்ததும் இல்லை என கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ திரையரங்கில் நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க இசை நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து முதல் இந்தியராக இளையராஜா, தனது முதல் மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். அப்போது தனது பிரபலமான சில பாடல்களின் பிரத்யேக இசைக்குழு பதிப்புகளை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!