தலைவர்கள் இரங்கல்... இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி காலமானார்..!
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து. இவர் திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது மறைவுக்கு பிரபலங்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் நெல்லை சு.முத்து. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான இவர் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், திருவனந்தபுரத்தில் இன்று காலமானார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள காலமான முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்துவின் உடல், மதுரையில் உள்ள அவரது மகளின் வீட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
