பதறும் தலைவர்கள்... 2026 தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? அதிர்ச்சியளித்த கணிப்புகள்!?

 
2026 தேர்தல் கருத்துக் கணிப்பு
 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்று ஆளாளுக்கு ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கையில் கருத்து கணிப்புகள் வெளியாகி அரசியல் கட்சி தலைவர்களை பதற செய்திருக்கிறது. ஒரு பக்கம் சீமான் முஷ்டியை முறுக்கிக் கொண்டு பேட்டிக் கொடுத்து கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் விஜய், ‘ப்ரோ..’ என்று நட்புடனே அரசியல் செய்கிறார். ஆனாலும் அரசியல் விமர்சகர்களின் கணிப்புகளின் முடிவுகள் வேறு விதமாக இருக்கின்றன. அப்போ அண்ணாமலையோட அரசியல்... அதுவும் எடுபடவில்லை என்கிறார்கள். 

தமிழக 2026 சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பணிகளை திட்டமிட தொடங்கிவிட்டன.  "அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை" என்று சொல்வார்கள். மக்கள் பிரச்சினைகளில் ஆளுங்கட்சியுடன் மோதும் அரசியல் கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வது காலம் காலமாக நடக்கின்ற ஒன்று தான்.  

எடப்பாடி பழனிசாமி

கடந்த கால தேர்தல்களில் அமைந்த கூட்டணிகளே சாட்சி. தமிழ்நாட்டில் இன்றைக்கு திமுகவும், பாஜகவும் எதிரெதிர் கட்சிகள். 2001 தேர்தலில் இந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தன. அதேபோல், இன்றைக்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தன. 

பாமகவும், தமாகாவும் அதே கூட்டணியில் தான் அங்கம் வகித்தன. மும்முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.  2006ல்  சட்டசபை தேர்தலில் நிலைமை அப்படியே மாறியது. அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பாமக, இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அங்கம் வகித்தன. புதிதாக உதயமான தேதிமுகவும், பாஜகவும் தனித்து போட்டியிட்டன. 4 முனைப்போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. 2011ல்  சட்டசபை தேர்தலில் மீண்டும் நிலைமை மாறி  அதிமுக கூட்டணியில் தேதிமுக, இரு கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள்  கட்சிகள் இடம் பெற்றிருந்தன. பாஜக தனித்து களம் கண்டது.

மும்முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. 2010ல்  நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான், இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். 2016ல்  சட்டசபை தேர்தலில்  அதிமுக தனித்து போட்டியிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. தேமுதிக தலைமையில் மதிமுக, இரு கம்யூனிஸ்டு கட்சிகள், தமாகா, விடுதலை சிறுத்தைகள் இணைந்தன. சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. 6 முனைப்போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2021  சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள்  கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, கட்சிகள் அங்கம் வகித்தன. அமமுக, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக கூட்டணியை அமைத்தன. சீமான் தனித்து போட்டியிட்டார். 5 முனைப்போட்டி நிலவிய இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இப்படி, தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறிக்கொண்டே வருவது வாடிக்கை தான்.  

அந்த வகையில்,  2026  சட்டசபை தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது? என்பதற்கான ஒரு கணிப்பு தான் இந்தப் பதிவு.  தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது. தற்போதைய கூட்டணியை அப்படியே தக்கவைத்துக் கொள்ளவே தி.மு.க. முயற்சி செய்து  வருகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.கவிலிருந்து  ஏற்கனவே ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் பிரிந்து நிற்கும் நிலையில், கூட்டணி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை அதிமுகவுக்கு உள்ளது.

திருமா விஜய்

வழக்கம்போல, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என சீமான் அறிவித்துவிட்டார். பா.ஜ.க. தலைமையில் தனி அணி உருவாகலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக விஜய் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்று இப்போதே எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து கிடக்கின்றனர்.  அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோர், '2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும்' என அறிவித்துள்ளார்.

இதன்படி  2026 சட்டமன்ற  தேர்தலில் 5 முனைப் போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இதில், வெற்றி வாய்ப்பு யாருக்கு? என பார்க்கும் போது, வாக்குகள் சிதறும் என்றே தெரிகிறது. வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அந்த வெற்றி அமையக்கூடும் என கூறப்படுகிறது.  வாக்குகள் சிதறுவது ஆளுங்கட்சிக்குத் தான் சாதகமாக அமையும் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web