மார்ச் 31க்குள் வெளியேறுங்க... பாகிஸ்தான் பகிரங்க அறிவிப்பு!

வெளிநாட்டினருக்கு அமெரிக்கா செக் வைத்து, நாட்டை விட்டு வெளியேற்றி வருவதைப் போலவே பாகிஸ்தான் கறார் காட்ட துவங்கியுள்ளது. ஆனால், இது ஆப்கானிஸ்தானிற்கு எதிராக.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்திகளில் ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இல்லையெனில் அவர்கள் அனைவரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.
ஆப்கன் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த தகவலை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை என்று ஏஆர்ஒய்(ARY) செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் அந்நாட்டில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!