விட்டாச்சு லீவு... தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - சிறப்பு ரயில் மே 12 முதல் ஜூன் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வெள்ளிக்கிழமை மட்டும் செல்லும் தாம்பரம் - திருவனந்தபுரம் ரயில் மே 9 முதல் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஞாயிறு அன்று இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு அன்று இயங்கும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது
திங்கட்கிழமை இயங்கும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் சேவை மே 12 முதல் ஜூன் 2 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!