குடையோட கிளம்புங்க... தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

 
கன மழை

தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் தூரல் விழுந்தாலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், திருத்தணி, காஞ்சிபுரம் போன்ற இடங்களிலும் பரவலாக நேற்று மழை பெய்தது. இந்தியாவின் தென்கிழக்கு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று  இணைகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் அதிகரித்து வரும் காரணமாக வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும், சில இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சரிந்து விழுந்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் சில இடங்களில் பெய்துள்ளது.

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! மிக கன மழை எச்சரிக்கை!!

இந்நிலையில், இந்தியாவின் தென்கிழக்கு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று  இணைவதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web