அதிமுகவில் லீமா ரோஸ்க்கு பதவி… மகளிரணி இணைச் செயலாளராக நியமனம்!

 
லீமா ரோஸ்

அண்மையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வில் இணைந்த லாட்டரி அதிபர் மார்டினின் மனைவி லீமா ரோஸ்க்கு மகளிரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதவ் அர்ஜுனா

14 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து, பொதுச்செயலாளராகவும் பணியாற்றிய லீமா ரோஸ், உரிய அங்கீகாரம் இல்லை என கூறி அக்கட்சியில் இருந்து விலகினார். அதன் பின்னர் அதிமுகவில் இணைந்ததுடன், உடனடியாக முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

2026 சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை அல்லது கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த டிசம்பரில் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் புதிய கட்சி தொடங்கியதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!