பழம்பெரும் நட்சத்திரம் பிரிகிட் பார்டொட் காலமானார்...!
பாரிஸ்: பழம்பெரும் பிரெஞ்சு நடிகை பிரிகிட் பார்டொட் (91) காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1952 முதல் 1973 வரை பிரெஞ்சு மொழி படங்களில் தொடர்ந்து நடித்த அவர், தனித்துவமான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தவர்.
திரையுலகிலிருந்து விலகிய பின்னர், விலங்குகள் நலன் தொடர்பான செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தார் பிரிகிட் பார்டொட். விலங்குகள் பாதுகாப்பு குறித்து அவர் எடுத்த நிலைப்பாடுகள் மற்றும் முயற்சிகள் பலரின் கவனத்தை ஈர்த்தன.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் காரணங்களால் அவர் காலமானதாக கூறப்படுகிறது. அவரது மறைவுச் செய்தியைத் தொடர்ந்து ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
