கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது... தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நிகழாண்டுக்கான தவக்காலம் சாம்பல் புதன் தினமாக கடைபிடிக்கப்பட்டு இன்று தொடங்கியது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் ஏப்ரல் 13ம் தேதி குருதோலை ஞாயிறு தினத்தைத் தொடர்ந்து 17ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது.
அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் புனித வெள்ளி இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது.
இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும். ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் தேவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!