10-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடச்சுமை குறைகிறது.. வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது!
கேரள மாநிலக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அடுத்த கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் 25% குறைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிகப்படியான பாடங்களை ஒரு குறுகிய காலத்திற்குள் படித்து முடிக்க வேண்டிய கட்டாயத்தால் மாணவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கல்வி அமைச்சரிடம் புகார்கள் வந்தன. பாடங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, அவற்றின் அடிப்படைத் தத்துவங்களை ஆழமாகப் புரிந்து படிக்க மாணவர்களுக்குப் போதுமான நேரத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். இதற்கான பரிந்துரையை நிபுணர்கள் அடங்கிய பாடத்திட்டக் குழு ஏற்கனவே அரசுக்கு வழங்கியிருந்தது.

பாடப்புத்தகங்களின் அடிப்படை உள்ளடக்கத்திலோ அல்லது தரத்திலோ எந்த மாற்றமும் இருக்காது. தேவையற்ற மற்றும் மீண்டும் மீண்டும் வரும் பகுதிகள் மட்டுமே நீக்கப்படும். பாடங்கள் குறையும் போது, மீதமுள்ள 75% பாடங்களை ஆசிரியர்கள் இன்னும் நிதானமாகவும், விளக்கமாகவும் நடத்த முடியும். கேரள அரசின் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இதே போன்ற முடிவை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்கனவே நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பாடச்சுமை அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. "பாடத்திட்டத்தைக் குறைப்பது மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும். ஆனால், அது உயர்கல்விக்குத் தேவையான அடிப்படை அறிவைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்" என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
