”கெட்ட எண்ணங்களை சாக விடுங்கள்” புகழ் நித்தியானந்தா காலமானார்!! சீடர்கள் அஞ்சலி!!

 
நித்தியானந்தா

மனிதர்களின் கெட்ட எண்ணங்களை அழிந்துபோ. செத்து போ என அருளிய நித்தியானந்தம் சுவாமி காலமானார். அவரது சீடர்கள், பொதுமக்கள் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் கிராமத்தில் நித்தியானந்தம் சுவாமி நேற்று அதிகாலை காலமானார்.  ஸ்ரீநித்தியானந்த சுவாமிகளின் பிரம்ம சூத்திர குழுவினர்  கோவில் வாளாகத்தில் திரண்டு வந்து முறைப்படி சடங்குகள் செய்தனர்.  1000க்கும் மேற்பட்ட அவருடைய சீடர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.  மாலை 5 மணி அளவில் நித்தியானந்த சாமியாரை அமர்ந்த நிலையில் சமாதியில் நல்லடக்கம் செய்தனர். 

நித்தியானந்தா


தொடக்கத்தில் ரயில்வே துறையில் பணியாற்றிய நித்தியானந்தம்   குடும்ப வாழ்க்கையை விட்டு விலகினார். திருவள்ளூரில்  தனக்கென ஒரு தனி மடத்தை நிறுவினார்.  இவரிடம் அருள்வாக்கு கேட்பதற்காக மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட  தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஞான உபதேசம் அளித்து வந்தார்.
இந்நிலையில், நித்தியானந்தம் சுவாமிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைபாடு காரணமாக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை போளிவாக்கம் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்திற்கு கொண்டு வந்து இறுதிச்சடங்கு செய்து அமர்ந்த நிலையிலேயே அவரை  நல்லடக்கம் செய்தனர்.

நித்தியானந்தா

அவர் காலமானதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்ட அவரது சீடர்கள், “மனிதர்களின் இதயத்தில் உள்ள கெட்ட நினைவுகளை செத்துப்போ” என  அவரிடம் அருள்வாக்கு பெற்ற பிறகு  தங்களது வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டதாக  சிலாகித்து கூறினர். அவருடைய கருத்துக்கள், போதனைகள் வாழ்வில் மன நிம்மதியை தந்தததுடன், இந்த ஆத்ம திருப்தி தங்களுக்கு ஏற்பட்டது என கூறினர். அவரது மறைவு சுற்று வட்டார கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web