"பட்ஜெட் எப்படியிருக்கணும்னு நிர்மலா சீதாராமன் இங்க வந்து பார்க்கட்டும்” - செல்வப்பெருந்தகை பாராட்டு!
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான மக்கள் நல அறிக்கை என செல்வப்பெருந்தகை புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில், "ஒரு நிதிநிலை அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு வந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். சமூக நீதி மற்றும் உட்கட்டமைப்பு என இரண்டையும் சமமாகப் பாவிக்கும் தமிழகத்தின் நிதி மேலாண்மையை முன்மாதிரியாகச் சித்திரிக்கிறார்.

பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வெகுவாகப் பாராட்டிய அவர், பள்ளிக்கல்விக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 'புதுமைப் பெண்' திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்றவை மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் மைல்கல் திட்டங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் தொழில் துறைக்கான அறிவிப்புகள் குறித்து கூறிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவி மற்றும் பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்யும் கட்டணம் குறைக்கப்பட்டது போன்றவை வரலாற்றுச் சிறப்புமிக்கவை. செமிகண்டக்டர் மேம்பாட்டுத் திட்டம், சென்னை மெட்ரோ விரிவாக்கம் மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவை தமிழகத்தைச் சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும்.

"அனைவருக்கும் வளர்ச்சி – அனைவருக்கும் நலன்" என்ற நோக்கத்தோடு, தேர்தல் கால நெருக்கடிக்கு மத்தியிலும் ஒரு தெளிவான பார்வையை இந்த பட்ஜெட் வழங்கியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். தமிழகத்தின் முன்னேற்றப் பயணத்தை இந்த அறிக்கை மேலும் வலுப்படுத்தும் எனத் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
