ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்போம்... ஸ்டாலின் சூளுரை!

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை நிலைநிறுத்த மத்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே என இறுதியான முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயிர் பிரச்சினையான மொழிப்போரையும், தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழ்நாடு உயிர் பிரச்சினையான மொழிப்போரையும், தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள், மக்களிடம் கொண்டு சேர்க்கக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கினோம்.
இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக் குரல் வந்துள்ளது. ஒன்றிய அரசு, இந்தியை திணிக்கவில்லை சொல்லிக்கொண்டே அனைத்து முன்னெடுப்புகளையும் எடுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், நமக்கான நிதியையும் இன்னும் தரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!