தடைகளை தவிர்த்து வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்... ஈபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து!

 
 ஈபிஎஸ்

இன்று ஏப்ரல் 14ம் தேதி திங்கட்கிழமை அம்பேத்கரின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

 ஈபிஎஸ்

அதன்படி புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம். தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நன்னாளில், அன்பிற்கினிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றார்கள். தமிழ் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!

 ஈபிஎஸ்
 
'புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இந்தப் புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web