கொண்டாடனும்.... ஏப்ரல் 19ம் தேதி லீவு விடுங்க .... ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை!

தமிழ்நாட்டில் மாநில வழிக் கல்வி பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளன. தமிழகம் முழுவதும் 7518 பள்ளிகளில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதியுள்ளனர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18-ம் தேதியும், ஈஸ்டர் ஏப்ரல் 20-ம் தேதியும் கொண்டாடப்படவுள்ளன.
இதற்கு இடைப்பட்ட ஏப்ரல் 19ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையை உணர்ந்து ஏப்ரல் 19ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். தேர்வு தாள்களை திருத்தும் மற்ற ஆசிரியர்களுக்கும் தொடர் பணிகளுக்கு இடையே சிறு ஓய்வு கிடைக்கும். அது அடுத்து வரும் நாட்களில் ஆசிரியர்கள் புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கு வழிவகுக்கும். எனவே ஏப்ரல் 19ம் தேதி சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!