பாலின சமத்துவம் ஏற்பட உறுதி பூணுவோம்!! பெண்மையை போற்றுவோம்!!

 
சர்வதேச மகளிர் தினம்

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் . உலகம் முழுவதும்  நாளை  கொண்டாடப்படும் மகளிர் தினம் ஒரு போராட்டத்தில் தான் உருவெடுத்தது. ஜெர்மனியில் வசித்து வந்த கிளாரா ஜெட்கின் 1857ல் நியூயார்க்கில்  15000 பெண்களை ஒன்று திரட்டி பெண்களின் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்தினார். அந்த போராட்டத்தில்  பெண்களுக்கு சம உரிமை, ஊதிய உயர்வு,  8 மணி நேர வேலை இவற்றை வலியுறுத்தினார். அவரது  புகழ் படிப்படியாக உலகெங்கும் பரவத் தொடங்கியது. 

 

உலக மகளிர் தினம்
1910ல் கோபன்ஹேகனில் நடத்தப்பட்ட ‘சர்வதேச பெண்கள் மாநாட்டில்   17 நாடுகள் கலந்து கொண்டன. அந்த மாநாட்டில் கிளாராவும் பங்கேற்றார். இந்த மாநாட்டில் தான் பெண்கள் தினம் கொண்டாடுவதற்கான விதை ஊன்றப்பட்டது. இந்த யோசனை அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு 1911  , மார் 19ல்  சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  1913ல்  பெண்களுக்கு வாக்குரிமையை அளிக்க ஒப்புக்கொண்ட நாள் மார்ச் 8 . அதன்பிறகு மார்ச் 8 அதிகாரப்பூர்வமாக சர்வதேச பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1975ல் தான் ஐநா இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக  அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.


சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது. ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில் தான் இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன.ரஷ்யா உட்பட பல சர்வதேச நாடுகளில்  இன்று தேசிய விடுமுறை நாள். சீனாவில் மகளிர் தினத்தில் மகளிருக்கு அரை நாள் விடுமுறை. 

சர்வ்தேச மகளிர் தினம்
உடலால் உறுதியாக உள்ள ஆணை காட்டிலும் அதிக மன உறுதி கொண்டவள் பெண்.  தாயாக, தாரமாக ,தங்கையாக, மகளாக  உறவின் அனைத்து பரிணாமங்களிலும்  நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். தோல்விகளால் துவண்டு விடாமல் போராடி வெற்றி பெற்ற பல பெண்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம்.  கல்வியும், வேலை வாய்ப்புகளும்  பொருளாதார சுதந்திரத்தை பெற்று தந்து விட்டன. உடனடியாக நாம் செய்யவேண்டியது ஒன்றே .பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுப்போம். உலகம் முழுவதும் மகளிர் அனைவரும் ஒரே அணியில் திரள்வோம். இன்னும், இன்னும்  நம்மால் மாற்றத்தை கொண்டுவர முடியும். இந்த உலகை பாலின பாகுபாடற்ற இடமாக மாற்ற உறுதிமொழி ஏற்போம். பெண்மையை போற்றுவோம். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web