லிபியா முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை... !

 
லிபியா
 

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் கடாஃபி (56), வடமேற்கு லிபியாவின் ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டார். வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் அவரை சுட்டுக்கொன்று தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் வளமிக்க லிபியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மும்மெர் கடாஃபி, 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டார். அதன்பிறகு அவரது அரசியல் வாரிசாக சைஃப் அல் இஸ்லாம் கருதப்பட்டார். 2011 புரட்சிக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அவர், 2017 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

சைஃப் அல் இஸ்லாம், லிபியாவில் பேரழிவு ஆயுதத் திட்டங்களை கைவிட பேச்சுவார்த்தை நடத்த முக்கிய பங்கு வகித்தவர். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!