விமான விபத்தில் லிபிய ராணுவத் தளபதி உயிரிழப்பு…!
லிபியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. ஐநா சபை, அமெரிக்கா, துருக்கி நாடுகள் அங்கீகரித்த அரசு தலைநகர் டிரிப்போலியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இதற்கு எதிராக ரஷ்யா, எகிப்து ஆதரவுடன் கிழக்கு பகுதியைத் தளமாகக் கொண்ட மற்றொரு அரசு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் டிரிப்போலி அரசைச் சேர்ந்த முக்கிய ராணுவத் தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத், உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் துருக்கிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவர்கள் பயணித்த தனியார் ஜெட் விமானம், அங்காராவிலிருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட விமானத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்குக் காரணம் என துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா மற்றும் லிபிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
