அட....!! இனி சனிக்கிழமைகளிலும் லைசென்ஸ்!! வாகன ஓட்டிகள் உற்சாகம்!!

 
வட்டார போக்குவரத்து கழகம்

தமிழகம்  முழுவதும் 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன . இவை மாநில அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகின்றன. இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக இனிமேல் சனிக்கிழமைகளிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையர்  மோட்டார் வாகன அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பி உள்ளார்.

வட்டார போக்குவரத்து கழகம்

“ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை வேலைக்குச் செல்வோர் மற்றும் அரசுப் பணியாளர்கள் பெறும் வகையில் சென்னையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஓட்டுநர் உரிமம் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதிகளவு ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இவைகளை விரைந்து முடிக்கும் வகையில்  வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களை சனிக்கிழமையும் செயல்பட அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அரசுப் பணியாளர்கள், அலுவலகம் செல்பவர்கள் மட்டுமின்றி அனைத்து பொதுமக்களும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் பயன்பெறலாம்.

வட்டார போக்குவரத்து கழகம்
 
இதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.   அதன்படி, சனிக்கிழமை செயல்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் குறித்த தகவல்களை கலெக்டர் மூலம் வெளியிட வேண்டும். அந்த செய்திக்குறிப்பை போக்குவரத்து ஆணையரின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்புக்கு  அனுப்பி வைக்க  வேண்டும். ஆட்சியரின் செய்திக்குறிப்பின்றி எந்த ஒரு அலுவலகமும் செயல்படக் கூடாது. இவ்வாறு அலுவலகங்கள் சனிக்கிழமை செயல்படும்போது, அதை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் தவறாகப் பயன்படுத்த முயலக்கூடாது.   இதில் ஏதேனும் புகார் எழுந்தால், உத்தரவு திரும்பப் பெறப்படும்”  என கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்