சிறை காதல்… பரோலில் திருமணம் செய்த ஆயுள் தண்டனை கைதிகள்!
ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஹனுமான் பிரசாத் மற்றும் பிரியா சேத் இருவரும் 6 மாதங்களுக்கு முன்பு சந்தித்து பழகத் தொடங்கினர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
திருமணத்திற்காக நீதிமன்றத்தில் பரோல் கேட்டு மனு அளித்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம், அல்வாரில் உள்ள பரோடமேவில் திருமணம் நடத்த 15 நாள் அவசர பரோல் வழங்க உத்தரவிட்டது. இதனால் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஹனுமான் பிரசாத் 2017-ல் ஐந்து பேரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். பிரியா சேத் 2018-ல் டேட்டிங் செயலி மோசடி மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். கடுமையான குற்றப் பின்னணி இருந்தாலும், இருவரின் காதலுக்கு நீதிமன்றம் சட்டப்படி அனுமதி வழங்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
