பெரும் அதிர்ச்சி... லிப்ட் அறுந்து விழுந்து மெக்கானிக் உயிரிழப்பு!

 
lift


சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை பகுதியில் செயல்பட்டு வருகிறது ஹயாத் ஹோட்டல். பிரபல தனியார் நட்சத்திர விடுதியான  ஹோட்டலில் நேற்று மாலை பழைய லிப்ட்டை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது லிப்ட் மேலே இருந்து கீழே விழுந்ததில் ஊழியர் சாம் சுந்தர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹோட்டலில் பழைய இரும்பு பொருட்களை கொள்முதல் செய்வதற்காக பெரியமேடு பகுதியில் வசித்து வருபவர்  அப்துல் காதர் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார்.

lift

இந்நிலையில், ஹோட்டலில் பழைய பொருட்கள் அகற்றும் பணி கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இவரிடம் லிப்ட் மெக்கானிக்கான பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் 37 வயது ஷாம் சுந்தர் .  நேற்று மாலை பழைய லிப்ட் ஒன்றை அகற்றிவிட்டு புதிய லிப்ட் மற்றும் பணி நடைபெற்று வந்துள்ளது
இந்நிலையில் பழைய லிப்ட்டை அகற்றும் பணியில் ஷாம் சுந்தர் சக ஊழியர்களோடு பணிபுரிந்து வந்தார்.  பழைய லிப்ட் 3 வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்துள்ளது. அப்போது கீழே பணிபுரிந்து கொண்டிருந்த ஷாம் சுந்தர் மீது லிப்ட் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதையடுத்து ஒப்பந்ததாரர் அப்துல் காதர் மற்றும் ஹோட்டல் சீஃப் இன்ஜினியர் காமராஜ்  மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்து  இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web