விகடன் இணையதள முடக்கத்தை நீக்குங்க... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் கைவிலங்கிட்டு விமானங்களில் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி ட்ரம்பை சந்தித்த போது கூட கேட்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது பெரும் பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில் இது குறித்து விகடன் இணையதளம் கார்ட்டூன் போட்டு காட்டியது . இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய அரசு விகடன் இணையதளத்தை முடக்கியுள்ளது.
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக விகடன் இணையதளம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில், விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விகடன் வெளியிட்ட கார்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் அளித்ததை தொடர்ந்து விகடன் இணையதளம் முடக்கப்பட்டது. விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கார்ட்டூனை முடக்குமாறு விகடனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!