நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருந்த சிங்கம் !

குஜராத் மாநிலத்தில் வீட்டின் சமையலறையில் சிங்கம் ஒன்று பதுங்கி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காந்தி நகர், குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டம் கோவயா கிராமத்தில் வசித்து வருபவர் ரம்பை லக்னோத்ரா. இவர் அந்த கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் புதன்கிழமை இரவு 12 மணிக்கு லக்னோத்ராவின் வீட்டின் சமையலறையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
#Gujarat
— Dilip Kshatriya (@Kshatriyadilip) April 2, 2025
Panic grips Gujarat’s Amreli as a lion storms into a residential house in Rajula's Kovaya village late last night, sparking chaos in the area. Authorities now working to contain the situation.@NewIndianXpress @santwana99 @jayanthjacob pic.twitter.com/7GEwW1tAag
இந்த சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்தனர். சமையலறைக்கு சென்று பார்த்ததில் உள்ளே சிங்கம் இருந்துள்ளது. வீட்டின் மேற்கூரை வழியாக சமையல் அறைக்குள் சிங்கம் நுழைந்துள்ளது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்தபடி வீட்டில் இருந்து வெளியேறினர். பின்னர், கிராம மக்களும் விரைந்து சென்று வீட்டில் இருந்த சிங்கத்தை விரட்ட முயற்சித்துள்ளனர். மக்களின் சுமார் 2 மணிநேர முயற்சிக்குப்பின் சிங்கம் வீட்டில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. வீட்டின் சமையல் அறையில் சிங்கம் இருந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!