சிங்கத்துடன் செல்பி ... கிர் சபாரிக்கு சென்றிருந்தேன்... பிரதமர் நெகிழ்ச்சி பதிவு!

 
சிங்கம் மோடி

இன்று மார்ச் 3ம் தேதி திங்கட்கிழமை உலக விலங்குகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு பாதுகாப்பகத்தில் (Gir Wildlife Sanctuary) சிங்க சஃபாரியில் (Lion Safari) பங்கேற்றார். ஜிர் காடு ஆசிய சிங்கங்களின் ஒரே தாயகம் என்பதால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முயற்சிகள்  நேரில் பார்வையிட்டு கேட்டறிந்து புகைப்படமும் எடுத்தார்.


ஒருகாலத்தில், ஆசிய சிங்கங்கள் இந்தியா முழுவதும் காணப்பட்டன. ஆனால், காற்றில் இருக்கும் மற்ற விலங்குகள் வேட்டையாடுகிறது என்பதாலும், காட்டுப்பகுதிகள் குறைதல் போன்ற காரணங்களால், அவற்றின் எண்ணிக்கை கடும் சரிவைக் கண்டது. கடந்த சில ஆண்டுகளில், இந்திய அரசு மற்றும் குஜராத் அரசு இணைந்து மேற்கொண்ட பாதுகாப்பு முயற்சிகளால், இப்போது ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த உலகத்தில் ஆசிய சிங்கங்கள் வாழும் ஒரே இடம் குஜராத்தின் ஜிர் வனம் தான். தற்போது 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 9 மாவட்டங்களில் உள்ள 53 தாலுக்காக்களில் சிங்கங்கள் இருக்கிறது. எனவே, அடிக்கடி பிரதமர் மோடி அங்கு சென்று பார்வையிட்டு வருகிறார். அப்படி தான் இன்று உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு சென்றுள்ளார். 


அங்கு சென்று புகைப்படங்கள் எடுத்தும் வீடியோவையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில் ” இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தன்று, நான் கிர் என்ற இடத்தில் சஃபாரிக்குச் சென்றேன். இது நம் அனைவருக்கும் தெரியும், கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம். நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, ​​நாங்கள் கூட்டாகச் செய்த பணியின் பல நினைவுகளை கிர் பகுதிக்கு சென்றதும் நிழலாடியது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?