பள்ளிக்கூடத்தில் சிதறி கிடந்த மது பாட்டில்கள், ஊறுகாய், பிரியாணி பொட்டலங்கள்... காவலர் வெறிச்செயல்!

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மாணவர்கள் யாரும் பள்ளியில் இல்லாததால் அந்த ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சிலர் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அவர்கள் அருகில் மது பாட்டில்கள் சிதறிக் கிடந்தன.
இதனை இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் மோகன் வீடியோ எடுத்துள்ளார். மது அருந்திய கூட்டத்தில் காவலர் ஒருவரும் இருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்து திருவெறும்பூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மது அருந்தினார்களா என திடீர் சோதனை நடத்தினர்.
மணிகண்டன் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் இளையராஜா என்பவரின் நண்பர்களான தனியார் கார் ஓட்டுனர்கள் வினோத், மகேஷ்வரன் மற்றும் ரயில்வே ஊழியரான பிரபு ஆகியோர் அங்கு இருந்தனர். அவர்களை சந்திக்க இளையராஜா சென்றிருந்தார். அங்கு பேசி கொண்டிருந்த பொழுது தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது எனவும் நால்வரில் மகேஷ்வரன், பிரபு இருவர் தான் அங்கு மது அருந்தியதும் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து மகேஷ்வரன், பிரபு ஆகிய இருவர் மீதும் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!