"ஒழுங்காகக் கேளுங்கள், ஒழுங்காகப் பதில் சொல்கிறேன்!" - மீண்டும் பத்திரிகையாளர்களிடம் சீறிய சீமான்!

 
சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின் சர்ச்சைகள் குறித்துப் பேசியதோடு, தமிழ்நாடு அரசின் மழை பாதிப்புத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் காரசாரமான கருத்துகளைத் தெரிவித்தார்.

மழை பாதிப்புகள் குறித்துப் பேசிய சீமான், "அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. நீர்த்தேக்கங்களைப் பராமரிக்கவும் இல்லை. ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை. இதையே இன்னும் எத்தனை வருடங்கள் பேசிக் கொண்டிருப்பது?" என்று கேள்வி எழுப்பினார்.

சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசிய அவர், "நான் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. என்னை நம்பியுள்ள 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன்" என்று கூறி, கூட்டணி பற்றிய தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

சீமான்

கடந்த வாரம் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஏற்பட்ட சர்ச்சை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டதற்குப் பதிலளித்த சீமான், "கேள்வியை கேள்வியாக வைத்தால் பிரச்சனை இல்லை. ஆனால், கேள்வியைக் கேட்கத் தெரியாமல் கேட்டு, அதற்கு விளக்கம் கூறினால், 'மரியாதையாகப் பேசுங்கள்' என்று சொன்னால் கோபம் வருமா வராதா?" என்று கேட்டார்.

மேலும், "நீங்கள் ஒழுங்காகக் கேளுங்கள்; நான் ஒழுங்காகப் பதில் கூறுகிறேன். நல்ல கேள்விகளை முன்வைத்தால், நான் அழகான பதில்களைக் கூறுவேன்" என்று கூறினார். செய்தியாளர்களிடம், "இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டோம்" என்று வருத்தம் தெரிவிக்கும்படி சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சீமான்

அவர் மெட்ரோ இரயில் திட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், அது பல்வேறு நாடுகளில் தோல்வியடைந்த திட்டம் என்றும் கூறினார். அரசுப் பள்ளிகளின் தரம் குறித்துப் பேசிய அவர், "அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்பது எங்களின் சட்டமாக இருக்கும். அமைச்சர் முதல் அனைத்து அரசு அலுவலர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்பது எங்களின் சட்டமாக இருக்கும்," என்று கூறி, அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதாக உறுதியளித்தார்.

மேலும், அமைச்சர்கள் உடல்நிலை சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதைக் கண்டித்த அவர், "அரசு மருத்துவமனையின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், மக்கள் எவ்வாறு நம்பிச் செல்வார்கள்?" என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!