ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பரிதாப பலி!! கோவில் திருவிழாவில் சோகம்!

 
லாவண்யா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் களக்காட்டூர் ஊராட்சியில் விச்சந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர்கள்  காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு 3 மகள்கள். இதில் 3வது மகள்  காஞ்சனாவை சென்னையில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சரவணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 13 வயதில் லாவண்யா என்ற மகளும், 9 வயதில் புவனேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் காஞ்சனா குடும்ப பிரச்சனை காரணமாக 3  ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் லாவண்யாவும், புவனேசும் தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.

லாவண்யா

இதில்  லாவண்யா 7ம் வகுப்பும், புவனேஷ் 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.  மார்ச் 11ம் தேதி  விச்சந்தாங்கலில் நடைபெற்ற அங்காளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தாத்தா பாட்டி இவர்களை அழைத்து சென்றனர். இதில் இரவு சாமி உற்சவ ஊர்வலத்திற்காக மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. இவற்றின் கூடுதல் அலங்காரத்திற்காக  மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பாட ஆயத்தமானது. இந்நிலையில்  சாமி வீதியுலாவில் கலந்துகொள்ள ஆசைப்பட்ட சிறுமி லாவண்யா தாத்தாவிற்கு தெரியாமல் மாட்டுவண்டியின் பின்புறம் அமர்ந்து விட்டார்.  மாட்டு வண்டியின் மேல் அமர்ந்து ஆசையுடன் திருவிழாவை ரசித்து பார்த்தப்படி சென்று கொண்டிருந்தார்.

சிறுவன் பலி

திடீரென  லாவண்யாவின் தலைமுடி மாட்டு வண்டியின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில்  சிக்கி விட்டது.  விடுவிக்க முயன்ற சிறுமி முடியாமல் கத்தி கூச்சலிட தொடங்கினார். சத்தத்தினை கேட்டு ஓடிவந்தவர்கள் உடனடியாக ஜெனரேட்டரின் இயக்கத்தினை நிறுத்தி சிறுமியை மீட்டனர். தலையின் மேல் பகுதி முழுவதும் பெயர்ந்து, படுகாயங்களுடன் சிறுமி மீட்கப்பட்டார். உடனடியாக  காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web