மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை... மாவட்ட கலெக்டர் அறிவிப்பு !

 
விடுமுறை


தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அமாவாசை தினத்தில்  ஊஞ்சல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா பிப்ரவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. பிப்ரவரி 27ம் தேதி மயானக்கொள்ளை விழாவும், மார்ச் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி விழாவும் நடைபெற இருந்து வருகிறது.  

உள்ளூர் விடுமுறை


இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மார்ச் 4ம் தேதி செவ்வாய்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட பக்தர்களின் வசதிக்காக மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை
இதுகுறித்து  விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்திக்குறிப்பில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்ச் 04ம் தேதியில் நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.  மாணவ, மாணவியர்களுக்கு மார்ச் அன்று தேர்வுகள் நடைபெறத் தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web