அமளிக்கு இடையே மக்களவை மார்ச் 9-ம் தேதி வரை ஒத்திவைப்பு!
Updated: Feb 13, 2026, 13:22 IST
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் (பிப்ரவரி 13) நிறைவடைந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் முழக்கங்களுக்கு மத்தியில், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் மார்ச் மாதம் 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை மக்களவை கூடியதுமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். எப்ஸ்டீன் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கொண்டு வந்த தீர்மானம் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தகம் தொடர்பான விவாதங்களும் அவையில் அனலை கிளப்பின.
எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பம் நீடித்ததால், அவைத் தலைவர் ஓம் பிர்லா முதலில் அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் நிலைமை சீராகவில்லை. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு, இரண்டாம் பகுதிக்காக அவை மார்ச் 9-ம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என அறிவித்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்த இடைப்பட்ட மூன்று வார கால விடுமுறையில், பல்வேறு அமைச்சகங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
