எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ச்சி அமளி… மக்களவை 6 வது நாளாக முடக்கம்!
எதிர்க்கட்சித் எம்பிக்களின் தொடர்ச்சி அமளி காரணமாக மக்களவை இன்று ஆறாவது நாளாகவும் முடங்கியிருக்கிறது. கடந்த வாரம் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முழு வாரமும் மக்களவையை முடக்கி இருந்தனர்.

இந்த நிலையில், நேற்றுமுதல் பட்ஜெட் விவாதம் தொடங்கவிருந்த போதும், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டன.இன்று காலை அமளியில் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஈடுபட்டதால், மக்களவையின் நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
