தனித்துவிடப்பட்ட சீமான்... காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகல்?

 
காளியம்மாள்

 

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகியிருப்பதாக  தகவல் பரவி வருகிறது. திமுக, அதிமுக, பாஜகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 8 சதவீதம் வாக்கு வங்கி கொண்ட தவிர்க்கமுடியாத  அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது. 

காளியம்மாள்

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். குறிப்பாக  சீமான் பெரியார் குறித்து பேசிய சர்ச்சை கருத்துகளுக்கு பிறகு நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர்.  

காளியம்மாள்

அந்த வகையில்  நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகியதாகத் தகவல் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டுள்ளதால் நாம் தமிழர் கட்சியின் குழப்பம் அடைந்துள்ளனர். கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல் குறித்து காளியம்மாள், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்; விரைவில் சொல்கிறேன் என   பதில் அளித்துள்ளார்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?