நெகிழ்ச்சி... மகா கும்பமேளாவில் காணாமல் போன 50000 பேர் மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைந்தனர்!

 
கும்பமேளா

 
 

உத்திரப்பிரதேச மாநிலத்தில்  மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அந்த வகையில் நடப்பாண்டில் ஜனவரி 13ம் தேதி மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற்றது.  இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.  வாகன நிறுத்த வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், துப்புரவு பணியாளர்கள், 25000 தொழிலாளர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

கும்பமேளா

 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளனர். பலர் தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்த சோக நிகழ்வும் நடைபெற்றது.ஆனால் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால் 54, 354 பேர் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தனர். 

 மகா கும்பமேளா

கும்பமேளா பகுதியில் 10 இடங்களில் டிஜிட்டல் கோயா பயா கேந்திரா மையம் அமைக்கப்பட்டிருந்தது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முகம் கண்டறியும் சாதனங்கள், பன்மொழி ஆதரவு அளித்தவற்றின் உதவியுடன் செயல்பட்டது. அரசின் தீவிர முயற்சியால் 50000 பக்தர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று இணைந்துள்ளதாக  தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web