ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய லாரி!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!!

 
விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருந்து ஒரே  குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆட்டோவில் விழுப்புரம் மேல்மலையனூர் அங்களாம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு  ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே ஆட்டோ சென்றுக்கொண்டிருந்த போது திண்டிவனத்தில் திருவண்ணாமலைக்கு தார் ஏற்றிச்சென்ற லாரியின் டயர் வெடித்ததில் லாரி கட்டுப்பாட்டை இழந்தது. இதனால்  லாரி ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்தது.

விபத்து

ஆட்டோவில் பயனம் செய்த செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்  குமரகுரு,  அவரது மனைவி மஞ்சுளா,  மகன் விஜயன் மற்றும் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த குருமூர்த்தி அனைவருமே  உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்ற காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து

இதில் லாரி ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த விபத்து காரணமாக திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கோவிலுக்கு சென்று திரும்பிய போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web