டிராக்டர் மீது லாரி மோதி 3 பெண்கள் உடல் நசுங்கி பலி!

 
 டிராக்டர் மீது லாரி மோதி 3 பெண்கள் உடல் நசுங்கி பலி!  

தமிழகத்தில் திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி  அழுந்தலைப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  மண்ணச்சநல்லூரில் உள்ள அரிசி ஆலையில் மொத்தமாக அரிசி மூட்டைகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மண்ணச்சநல்லூர் சென்ற 20 பெண்கள் அரிசி மூட்டைகளை வாங்கி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.  

 டிராக்டர் மீது லாரி மோதி 3 பெண்கள் உடல் நசுங்கி பலி!  
டிராக்டர்  திருச்சி - சிதம்பரம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் இருதயபுரம் அருகே சென்றபோது  டாரஸ் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அரிசி மூட்டையின் மேற்பகுதியில் அமர்ந்து வந்த சாந்தி, செல்வநாயகி, ராசாம்பாள் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

 டிராக்டர் மீது லாரி மோதி 3 பெண்கள் உடல் நசுங்கி பலி!  
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக   அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web