கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்... டீசல், சுங்க கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்!

கர்நாடகா மாநிலத்தில், டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கிய நிலையில், ஓசூர் அருகே தமிழக லாரிகள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தன.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் வேலைநிறுத்தம் காரணமாக இரவு 10 மணி முதல் தமிழக பதிவெண் கொண்ட அனைத்து லாரிகளும், தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்டன.
வடமாநிலங்களில் இலிருந்து கர்நாடகா வழியாக வடமாநில பதிவெண் கொண்ட லாரிகள் ஓசூர் வழியாக வழக்கம்போல இயங்கின. இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மேல் தமிழக-கர்நாடக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் படிப்படியாக இயக்கப்பட்டன.
இதனிடையே, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள அம்மாநில வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், அம்மாநில போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவிடம் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!