லாரி எதிரில் வர நடுரோட்டில்.... லைக்ஸ்க்காக உயிரை பணயம் வைத்த விபரீதம்... பகீர் வீடியோ!
பீகார் மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆசையில் இரண்டு இளைஞர்கள் செய்த ஆபத்தான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவுத்நகர் பாலத்தின் நடுவே, அதிவேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்தி வீடியோ எடுத்துள்ளனர்.
Hello @bihar_police
— Amitabh Chaudhary (@MithilaWaala) December 16, 2025
Kindly do the needful here … these chapri bikers for reel create such nuisance on road and risk life of people and will one day become the reason for major accident !!
📍Daudnagar bridge @police_aurangab pic.twitter.com/E7iJg0AqF3
லாரி ஓட்டுநர் கடைசி நேரத்தில் சமயோசிதமாக பிரேக் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையிலும், அந்த இளைஞர்கள் அச்சமின்றி கேமராவை நோக்கி கையாட்டி வெற்றிக் குறி காட்டிய காட்சிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளன.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். லைக்குகளுக்காக தங்களின் உயிரையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் ஆபத்தில் தள்ளும் இத்தகைய செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீகார் காவல்துறைக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
