அதிகாலையில் அதிர்ச்சி... லாரி-வேன் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு... கோவிலுக்கு சென்ற போது சோகம்!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா பழைய மாங்காடு பகுதியைச் சேர்ந்த 53 வயது சாவித்திரி, தனது குலதெய்வ கோயில் வழிபாட்டிற்காக 30க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சேலம் நோக்கி வேனில் புறப்பட்டார். ஆற்காடு, பையூர் பகுதிகளை சேர்ந்த 34 வயது குமரேசன் அந்த வேனின் டிரைவராக இருந்தார்.

சேலம் பைபாஸ் ரோட்டில் அதிகாலை 4 மணியளவில், இயற்கை உபாதை கழிப்பதற்காக வேன் நிறுத்தப்பட்ட போது, ஜவுளி லோடு ஏற்றிக்கொண்டு சென்று வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வேனில் மோதி கவிழ்ந்தது. சம்பவத்தில் வேனில் இருந்த சாவித்திரி மற்றும் குமரேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் இருந்த தருண் (15), கண்ணு (42), மாதிரை (39) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவத்துக்குப் பின்னர் மக்கள் அதிவேகமாக போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்ற பிறகு உயிரிழந்தவர்களின் சடலங்களை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பினர். லாரியில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
