600 கோடி சொத்து... 17 கிலோ தங்கம்... லாட்டரி மார்ட்டின் தாக்கல் செய்த ‘பகீர்’ பட்டியல்!

 
lottery martin lottery martin


புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 'லாட்டரி அதிபர்' மார்ட்டினின் மகனும், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியல் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. காமராஜர் நகர் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் இவர், தனக்குச் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.

இதில் 340 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களாகவும், 270 கோடி ரூபாய் அசையா சொத்துக்களாகவும் உள்ளன. வெறும் கார், பங்களாவுடன் நிற்காமல், சுமார் 26 கோடி ரூபாய் மதிப்பிலான 17.5 கிலோ தங்க நகைகள், 44 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 38 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி பெயரிலும் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் மற்றும் வைரங்கள் உள்ளன.

பிரமாண்டமான முதலீடுகள் தவிர, கடந்த ஓராண்டில் மட்டும் இவரது நிறுவனம் 59 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாம். புதுச்சேரி அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு இவ்வளவு பெரிய சொத்து விவரத்தைத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!