சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு 10 கோடி பரிசு... கேரள லாட்டரியால் அதிர்ஷ்டம்!

 
லாட்டரி லாட்டரி

கேரள மாநிலத்தில் கோடை கால பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் சீட்டுகளை வாங்கினர். இதற்கான குலுக்கல் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதில் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு முதல் பரிசான 10 கோடி ரூபாய் விழுந்தது. இந்த அதிர்ஷ்டத்தைப் பெற்றவர் யார் என்பது குறித்த தேடல் மலப்புரம் மாவட்டத்தில் முடிவுக்கு வந்தது.

மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த 51 வயதான பத்மநாபன் என்பவருக்கே இந்த மெகா பரிசு அடித்துள்ளது. இவர் கோட்டக்கல் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் சாதாரண ஊழியராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அன்றாட வாழ்க்கைக்காகப் போராடி வந்த தொழிலாளிக்கு ஒரே நாளில் பல கோடி ரூபாய் அதிர்ஷ்டம் கிடைத்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது வெற்றி குறித்துப் பேசிய பத்மநாபன் தான் அடிக்கடி லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்டவர் அல்ல என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பெரிய அளவிலான பம்பர் சீட்டுகளை மட்டும் எப்போதாவது வாங்கும் வழக்கம் கொண்ட தனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் தேடி வந்ததாகக் குறிப்பிட்டார். வறுமை நீங்கி கோடீஸ்வரராக மாறியுள்ள இவர் இந்த மகத்தான மாற்றத்திற்காக இறைவனுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!