உருகி உருகி காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்.... 15 நாட்களில் செவிலியர் தற்கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், காதல் திருமணம் செய்த 15 நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதாயூன் பகுதியைச் சேர்ந்த இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து வந்த இவர், இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் நீதிமன்றத்தில் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த அந்தப் பெண், திடீரென தனது சகோதரர் வீட்டிற்குத் திரும்பிய நிலையில் இந்தத் துயர முடிவு எடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலை மீட்ட காவல்துறையினர், அங்கு ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அந்தத் தற்கொலைக் குறிப்பில் தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்று அவர் குறிப்பிட்டிருந்தாலும், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தது முதல் அவர் நீண்டகாலமாக மன உளைச்சலில் இருந்ததாகத் தெரியவருகிறது. காதலித்து கரம் பிடித்த கணவருடன் வாழ்ந்த சில நாட்களிலேயே இவருக்குள் ஏற்பட்ட மன அழுத்தமே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், திருமணமான சில நாட்களிலேயே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவரது கணவர் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதும், 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே நேரில் வாக்குவாதம் நடந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குறிப்பில் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை என்றாலும், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
