காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் வைத்த காதலன்.. மாலையில் வேறு பெண்ணுடன் திருமணம்!

 
நிக்கி யாதவ்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது டெல்லியில் நடைபெற்ற ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு. ஷ்ரத்தாவின் காதலன் அஃப்தாப், அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஃபிரீசரில் வைத்து பிறகு வனப்பகுதியில் வீசினார். இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்து பகீர் கிளப்பியது.

இந்நிலையில், அதே போல மற்றொரு கொலைச் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காதலர் தினமான நேற்று (பிப்.14) டெல்லியில் நஜஃப்கரில் தாபா ஒன்றின் ஃபிரீசரில் இருந்து 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதுதான் அதற்கு காரணம்.

நிக்கி யாதவ்

இதனை கண்டுபிடித்த போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட இளம்பெண் டெல்லி உத்தம் நகரைச்சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அதாவது, டெல்லியில் கடந்த 2018-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது டியூசன் சென்டருக்கு சென்ற இடத்தில், சாஹிலுக்கு நிக்கி யாதவ் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இதனால் இருவரும் காதலிக்க தொடங்கினர். அதன் பிறகு இருவரும் வேறு வேறு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தனர். ஆனால் இருவரும் கிரேட்டர் நொய்டா பகுதியில் வாடகை வீடு எடுத்து ஒரே அறையில் தங்கி படித்து வந்தனர். கொரோனா காலத்தில் இருவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

கொரோனா முடிந்த பிறகு மீண்டும் வாடகை வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். சாஹில் தனியாக உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். சாஹில் தன் காதலை வீட்டில் சொல்லாமல் இருந்தார்.  இந்த நிலையில், சாஹிலுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. 

நிக்கி யாதவ்

இதை அறிந்த காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அன்றுதான் சாஹிலுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சாஹில் கெலாட் இளம்பெண்ணை கொலை செய்து ஃபிரீசரில் வைத்துள்ளார். இந்த சம்பவம் சுமார் 3 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. கொல்லப்பட்ட இளம்பெண் மாயமானதாகப் புகார் ஏதும் இல்லை. உடலை சிபிஐ மீட்ட பிறகே காவல்துறைக்கு தகவல் தெரியவந்தது, என்று தெரிவித்தார். 

முன்னதாக, சில நாள்களாக நிக்கியை அவர்களது உறவினர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் போலீஸில் புகார் செய்தனர். மேலும் அவர் காதலிப்பது குறித்தும் தெரிவித்தனர்.இதனையடுத்தே போலீசார் விசாரணையில் இது அம்பலமாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web