‘நீட்’ தேர்வில் குறைவான மார்க்... மகளை அடித்தே கொலை செய்த தந்தை!

‘நீட்’ தேர்வில் குறைவான மார்க் பெற்றதால், பெற்ற மகளை மாவு அரைக்கும் இயந்திரத்தின் கைப்பிடியால் அடித்தே கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தோண்டிராம் போசலே. 45 வயதான இவர் ஒரு பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். அவரது மகள் சாதனா. இவர் மருத்துவராகும் கனவில், கடந்த வாரம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றிருந்தார். ஆனால், எதிர்பார்த்ததைவிட குறைந்த மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தார். இது குறித்து, சனிக்கிழமை இரவு தந்தை மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் மோசமான நிலையில் தந்தை தோண்டிராம் போசலே, தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில், மாவு அரைக்கும் இயந்திரத்தின் மரக் கைப்பிடியை எடுத்துக் கொண்டு மகளின் தலை மற்றும் உடலில் பலமாக தாக்கத் தொடங்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சாதனாவை உடனே சாங்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி சாதனா உயிரிழந்தார். மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி, திடீரென பலத்த தாக்குதலால் ஏற்பட்ட உடல் காயங்கள் காரணமாகவே அந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது தந்தையிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது உயிரிழந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் குற்றம் சாட்டப்பட்ட தோண்டிராம் போசலேவை கைது செய்துள்ளனர். சிறுமி சாதனா மருத்துவம் படித்து குடும்பத்தின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த நிலையில், தனது கனவுகள் நொடிகளில் சிதறி விட்டதாக கூறி தந்தையின் கொடூரமான தாக்குதல் செயல் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!