சென்னைக்கு அருகே நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... திருவள்ளூருக்கு அதி கனமழை எச்சரிக்கை!

 
ரெட்

வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அது தற்போது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகச் சென்னைக்கு மிக அருகில் நீடிக்கிறது. இந்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு மிக அருகில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்திற்கு அதன் தீவிரத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு மாமல்லபுரம் அருகே சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மழை கனமழை

திருவள்ளூர் மாவட்டத்திற்கு (அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் (டிசம்பர் 3, 2025): ஈரோடு, நீலகிரி, கோவை (ஆரஞ்சு அலர்ட்), சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி (மஞ்சள் அலர்ட்).

பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முக்கிய விவரங்கள்: அதி தீவிர மழைக்கான காரணம்: ஆந்திராவுக்குச் செல்லும் என முதலில் கணிக்கப்பட்ட 'டிட்வா' புயல், சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்ததே அதீத மழைக்கு முக்கியக் காரணம் என்று அவர் விளக்கமளித்தார்.

மழை

பேரிடர் மீட்புக் குழு: மாமல்லபுரம் அருகே இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாமல்லபுரம் அருகே பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 11 தேசியப் பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் (330 வீரர்கள்) தயார் நிலையில் உள்ளனர்.

புயலால் சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் அறிவித்தபடி, கனமழையால் நீரில் மூழ்கிச் சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 582 கால்நடைகள் உயிரிழந்தன; அவற்றுக்கான நிவாரணமும் வழங்கப்படும்.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகப் பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ. போன்ற இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!