மெல்ல நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி... கரையோர மாவட்டங்களுக்கு இன்று கன மழை அலெர்ட்!
இலங்கை அருகே நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. கடந்த இரு நாள்களாக தமிழகத்தில் பல இடங்களில் மழை இடையிடையே பெய்து வரும் நிலையில், இன்று மேலும் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் விளைவாக, கடலோர தமிழகம், உள் மாவட்டங்கள், புதுவை–காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனத்திலிருந்து மிக கன மழை கூட தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
